வழிப்பறி- கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி மாவட்டம் மணிகண்டம் போலீஸ் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
மணிகண்டம்,
திருச்சி மாவட்டம் மணிகண்டம் போலீஸ் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி மேலவண்ணாரபேட்டையை சேர்ந்த பேச்சிமுத்து மகன் மணிகண்டன் என்கிற முட்டைமணி(வயது 27), நாகமங்கலம் நாராயணபுரத்தை சேர்ந்த சக்திவேல் மகன் சுதாகர்(27), வயலூர் சீனிவாசநகரை சேர்ந்த மகாலிங்கம் மகன் நவீன் என்கிற குமாரவேல்(23), உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்த முத்து மகன் குமார் என்கிற குமாரவேல்(22) ஆகியோரை மணிகண்டம் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் 4 பேர் மீதும் ஏற்கனவே மணிகண்டம் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மணிகண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சுப்பிரமணியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் மற்றும் கலெக்டர் ராஜாமணிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறையில் உள்ள மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரிடம், மணிகண்டம் போலீசார் வழங்கினர்.

Related Tags :
Next Story