ஒரு அதிகாரி நிர்வாகத்தின் கீழ் 3 கோவில்கள்: பணிகள் பாதிப்பால் பக்தர்கள் பரிதவிப்பு
ஒரு அதிகாரி நிர்வாகத்தின் கீழ் 3 கோவில்கள் செயல்படுவதால், பணிகள் பாதிப்படைந்துள்ளது. இதனால் பக்தர்கள் பரிதவித்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை ஆணையாளராக பணியாற்றி வந்தவர் கவிதாபிரியதர்ஷினி. இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாற்றப்பட்டார். இதனையடுத்து திருப்பரங்குன்றம் கோவிலுக்கு என்று தனியாக புதிய அதிகாரி நியமிக்கப்படவில்லை. அதே சமயம் கோவிலின் பொறுப்பு அதிகாரியாக அழகர்கோவில் துணை ஆணையாளர் நியமிக்கப்பட்டு, அவர் கோவிலின் நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.
இந்தநிலையில் தற்போது அழகர்கோவிலில் உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. அதில் தனி கவனம் செலுத்துவதற்கே அழகர்கோவில் துணை ஆணையருக்கு நேரம் போதாத நிலையில், அவரே திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மற்றும் பாண்டி கோவில்களையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இந்த 3 கோவில்களில் ஏதாவது ஒரு கோவிலில் பணிகள் சுணக்கமாகி வருகிறது. அதனால் கோவில் திட்ட பணிகள் மட்டுமல்லாது, திருவிழா பணிகள் சுறுசுறுப்பு இல்லாமல் மந்தமாக உள்ளது என்று திருக்கோவிலை சேர்ந்தவர்கள், பக்தர்கள் கூறிவருகின்றனர்.
குறிப்பாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கத்தேர் மராமத்து பணி முடங்கி கிடக்கிறது. இந்த கோவிலுக்கு என்று தனி அதிகாரி இருந்தால் தான் தங்கத்தேர் மராமத்து பணி நடக்க வாய்ப்பு உள்ளது. இது தவிர திருப்பரங்குன்றம் கோவில் யானை பாகன்கள் மற்றும் அவரின் உதவியாளரை 4 முறைக்கு மேல் தாக்கி உள்ளது. இந்த மாதிரி முரண்பாடுகள் இதற்கு முன் இருந்த யானை அவ்வையால் ஏற்படவில்லை. ஆனால் சமீபத்தில் புதிதாக வாங்கப்பட்ட யானை தெய்வானையால் பாகன் தாக்கப்பட்டது அனைத்து தரப்பினரையும் பரிதவிக்க வைத்துள் ளது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் முறையான நடவடிக்கை எடுப்பதற்கும், கோவில் நிர்வாகத்தை தொய்வின்றி கொண்டு செல்வதற்கும் தனி அதிகாரி இருக்கவேண்டும்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு மைதானம் அமைத்தல், சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு பயணியர் விடுதி அமைத்தல், சரவண பொய்கை பராமரிப்புக்கான சீரமைப்பு சிறப்பு திட்ட பணிகள், மலை மேல் உள்ள காசிவிசுவநாதர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் திட்டமிட்டும், இன்றுவரை தொடங்கப்படாத நிலையே நீடிக்கிறது.
இதுதவிர பாண்டிகோவில் பணியும் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதற்கு காரணம் சித்திரை திருவிழா கால கட்டத்திலும் 3 கோவில்களையும் ஒரே அதிகாரி கண்காணிப்பதால் இந்த நிலை உருவாகிறதாக பக்தர்கள் கூறுகின்றனர். இந்த குறைகளை தீர்க்கும் விதமாக போர்க்கால அடிப்படையில் திருப்பரங்குன்றம், பாண்டிகோவில்களுக்கு தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கும், இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story