காவிரி கூட்டுக்குடிநீர் வழங்கக் கோரி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமமக்கள்
காவிரி கூட்டுக்குடிநீர் வழங்கக் கோரி கிராமமக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நயினார்கோவில்,
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் வலசை கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீர் கிடைக்காததால் கிராம மக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த மருது என்பவர் கூறியதாவது:- நயினார்கோவில் யூனியன் வாணியவல்லம் ஊராட்சியில் வாணியவல்லம், வலசை, மேலியேனந்தல், மற்றும் யாதவர் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
இந்த ஊராட்சியின் நிதியின் மூலம் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி மிகவும் சிறியதாக உள்ளது. இதில் காவிரி கூட்டுக்குடிநீர் நிரப்பப்பட்டு, இந்த பகுதியில் உள்ள 4 ஊர்களுக்கு வாரம் இருமுறை தான் தண்ணீர் கிடைக்கிறது. இந்தநிலையில் இந்த தண்ணீர் தொட்டியின் நீரை கரைமேல் குடியிருப்பு கிராமத்திற்கு யூனியன் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் மாற்றப்பட்டு விட்டது.
இதனால் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து எங்கள் பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்த தண்ணீர் தொட்டியை மாற்றியமைப்பது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் நிலுவையில் உள்ளது. ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவின் பேரில் இரவோடு இரவாக மாற்றி அமைத்துள்ளனர்.
இதனை திரும்ப பெறா விட்டால் போராட்டம் நடத்தப்படும். மேலும் எங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீரை முறையாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தகவலறிந்து வந்த அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

Related Tags :
Next Story