கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழா: மலைப்பாதையை சீரமைக்கும் பணி தீவிரம்
கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு மலைப்பாதையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கூடலூர்,
தமிழக-கேரள எல்லையில், பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் வருகிற 30-ந்தேதி சித்ரா பவுர்ணமி விழா நடைபெறுகிறது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு குமுளியில் இருந்து கேரள அரசின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள பாதை வழியாக வாகனங்களில் செல்லலாம். இதேபோல் கூடலூர் அருகே பளியன்குடியில் இருந்து, தமிழக வனத்துறைக்கு சொந்தமான பாதை உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக, 6.6 கிலோமீட்டர் பயணித்தால் கண்ணகி கோவிலை சென்றடையலாம். சமீபத்தில் இரு மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் பளியன்குடி மலைப்பாதையை சீரமைப்பது என்றும், அந்த வழியாக செல்லும் பக்தர்களுக்கு 10 இடங்களில் குடிநீர், கழிப்பறை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.அதன்படி மேகமலை வன உயிரின காப்பாளர் ராம்மோகன் உத்தரவின்பேரில், கூடலூர் வனச்சரகர் அன்பழகன் மேற்பார்வையில், பளியன்குடியில் இருந்து அத்தியூத்து வரையிலான மலைப்பாதையை சீரமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் இருந்த செடிகள் அகற்றப்பட்டதோடு, கோவிலின் வடக்குவாசல் அருகே உள்ள தீர்த்த கிணறும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story