பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய வாலிபருக்கு ஒரு ஆண்டு ஜெயில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு


பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய வாலிபருக்கு ஒரு ஆண்டு ஜெயில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 25 April 2018 3:45 AM IST (Updated: 25 April 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய வாலிபருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

மும்பை, 

பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய வாலிபருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

பெஸ்ட் பஸ் டிரைவர்

மும்பை மாநகராட்சி பெஸ்ட் பஸ் டிரைவராக இருந்து வருபவர் ராம்கிர் கோசாவி(வயது47). இவர் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் தாதர் டி.டி. சர்க்கிள் பகுதியில் பஸ்சை ஓட்டிச்சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த உமேஷ் (25) என்ற வாலிபர் பஸ்சை முந்திச்செல்ல முயன்றார். ஆனால் ராம்கிர் கோசாவி வாலிபருக்கு வழிவிடாமல் பஸ்சை ஓட்டிச்சென்றதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த உமேஷ் ஒரு வழியாக பஸ்சை முந்திச்சென்று வழிமறித்து நிறுத்தினார்.

ஒரு ஆண்டு ஜெயில்

பின்னர் அவர் பஸ் டிரைவர் ராம்கிர் கோசாவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பஸ்சில் இருந்த கண்டக்டர் மற்றும் பயணிகள் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும் உமேஷ் ஆத்திரம் தாங்காமல் டிரைவரை பிடித்து சரமாரியாக தாக்கினார். இதுபற்றி தகவல் அறிந்த தாதர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பஸ் டிரைவரை தாக்கியதாக உமேசை கைது செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை நிறைவில், பஸ் டிரைவரை தாக்கிய உமேசுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

Next Story