தகிசரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தாய், மகன், மகள் படுகாயம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


தகிசரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தாய், மகன், மகள் படுகாயம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 25 April 2018 4:30 AM IST (Updated: 25 April 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

தகிசரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் தாய், மகன், மகள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மும்பை, 

தகிசரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் தாய், மகன், மகள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கியாஸ் சிலிண்டர் வெடித்தது

மும்பை தகிசர் கிழக்கு ராவல்பாடா ராஜ்புத் தெருவை சேர்ந்த பெண் மீனாட்சி(வயது40). இவருக்கு பிராச்சி(15) என்ற மகளும், சிராக்(13) என்ற மகனும் உள்ளனர். நேற்று காலை மீனாட்சி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சமையல் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்தது. மேலும் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் இருந்த மீனாட்சி மற்றும் அவரது மகன், மகள் தீயில் சிக்கி மரண ஓலம் எழுப்பினர்.

சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆபத்தான நிலையில் சிகிச்சை

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மீனாட்சி மற்றும் அவரது மகன், மகளை மீட்டு சதாப்தி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு 90 சதவீத தீக்காயத்துடன் மீனாட்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 2 பேருக்கும் 50 சதவீத தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. சம்பவம் குறித்து தகிசர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story