டாக்டரின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை
சிகிச்சைக்கு வந்த பெண்ணை தனது செல்போனில் ஆபாசமாக படம் பிடித்த டாக்டரின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என மருத்துவ கவுன்சிலுக்கு, போலீசார் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர்.
அடையாறு,
சென்னை மயிலாப்பூர், நாட்டு சுப்பராயன் தெருவில் டாக்டர் சிவகுருநாதன் (வயது 64) என்பவர் ஆர்.எம்.கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். திருவள்ளூரை சேர்ந்த 29 வயது பெண் மயிலாப்பூர் ரூதர்புரம் பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டதால் சிவகுரு நாதனின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
அப்போது, அவரை சோதனை செய்த சிவகுருநாதன், அவருக்கு தெரியாமல் தனது செல்போனில் உள்ள கேமராவை ஆன் செய்து பரிசோதனை செய்வதுபோல் ஆபாசமாக படம் பிடித்தார்.
அப்போது வெளியே சிகிச்சைக்கு காத்திருந்த தண்டையார்பேட்டையை சேர்ந்த உமாபதி (39) என்பவர் டாக் டர் ஒரு பெண்ணை செல்போனில் படம் எடுப்பதை பார்த்ததும் உள்ளே சென்று செல்போனை பறிக்க முயன்றார். உடனடியாக பதிவான வீடியோவை ‘டெலிட்’ செய்த டாக்டர் மெமரிகார்டையும் எடுத்து வெளியே வீசினார்.
இதுபற்றி தகவலறிந்து மயிலாப்பூர் போலீசார் விரைந்து சென்று டாக்டர் சிவகுரு நாதனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் டாக்டர் சிவகுருநாதனின் மருத்துவ அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மயிலாப்பூர் இணை கமிஷனர் சரவணன் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் விஸ்வேஸ்வரய்யா மேற்பார்வையில் மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் நேற்று பரிந்துரை கடிதத்தை அனுப்பி வைத்தார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில், டாக்டர் சிவகுருநாதன் மீது தடை விதித்தால், அவர் இந்தியாவில் எங்கும் மருத்துவ பணி செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story