பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரியில் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்ட வாலிபர் சாவு
பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரியில் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பூந்தமல்லி,
பூந்தமல்லியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று காரில் 2 நபர்கள் வந்தனர். அவர்களுடன் வந்த வாலிபர் ஒருவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. குமணன்சாவடி அருகே தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் அந்த வாலிபர் கிடந்ததாகவும், அவரை மீட்டு அழைத்து வந்ததாகவும் அந்த நபர்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து காயம் அடைந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து இறந்து போனவரின் பெயர் மற்றும் முகவரி, எப்படி காயம் ஏற்பட்டது? என்று வாலிபரை ஆஸ்பத்திரியில் சேர்த்தவர்களிடம் டாக்டர்கள் கேட்டனர்.
அப்போது அவர்கள் சிறிது நேரத்தில் வருவதாக கூறி காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதனை கண்ட டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்த நபரின் உடலில் காயம் இருந்ததால் சாலை விபத்தாக இருக்கலாம் என்று கருதி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்த நபரின் உடலில் இருந்த காயங்களை பார்த்து விட்டு இது விபத்தால் நேர்ந்த காயம் இல்லை என்றும், இந்த வழக்கை எடுக்க முடியாது என்றும் கூறி விட்டனர். இதையடுத்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்து போனவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது சாலை விபத்தில் காயம் அடைந்து இறந்து போனாரா? என்று விசாரித்து வருகிறார்கள்.
மேலும் வாலிபரை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு தப்பி ஓடியவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். இதற்காக காரில் வந்த மர்மநபர்களின் உருவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதா? என்றும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story