நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் முறைகேடு; 2 பணியாளர்கள் பணியிடை நீக்கம்


நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் முறைகேடு; 2 பணியாளர்கள் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 1 May 2018 4:15 AM IST (Updated: 1 May 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் முறைகேடு செய்த 2 பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

நெல்லை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் (பொறுப்பு) குருமூர்த்தி உத்தரவுப்படி நெல்லை மாவட்ட பொது வினியோக திட்ட துணை பதிவாளர் ரியாஜ் அகமது தலைமையில் மாவட்டத்தில் 50 ரேஷன் கடைகளில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின்போது ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் மற்றும் ரேஷன் கடையில் உள்ள பதிவுகளை சரிபார்த்தனர். அப்போது 18 கிலோ அரிசி, 49½ கிலோ சீனி, 15 லிட்டர் மண்எண்ணெய், 1 கிலோ கோதுமை, 28 கிலோ துவரம் பருப்பு, 13 லிட்டர் பாமாயில், 363 தேயிலை பாக்கெட்டுகள், 100 உப்பு பாக்கெட்டுகள் மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவை இருப்பு குறைவாக இருந்தன. போலிப்பதிவு மூலம் அவற்றை விற்பனை செய்ததும், சில கடைகளில் கூடுதல் இருப்பு வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 2 ரேஷன் கடை விற்பனையாளர்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு முறைகேடுகளில் ஈடுபடும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது இந்த தகவலை இணை பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்து உள்ளார்

Next Story