கோவை விமானநிலைய விரிவாக்க பணிக்காக ஆர்ஜிதம் செய்யும் நிலத்துக்கு அதிக தொகையை இழப்பீடாக வழங்கவேண்டும், பொதுமக்கள் மனு
கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்காக ஆர்ஜிதம் செய்யும் நிலத்துக்கு அதிக அளவு இழப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என்று குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் குடிநீர் வசதி, சாலை சீரமைப்பு, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.
அதை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் செந்தில்ராஜ் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சின்னியம்பாளையம், பாரதிநகர், காந்திநகர், அருள்முருகன்நகர், சாஸ்தா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 600 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் கோவை விமானநிலைய விரிவாக்க பணிக்கான நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக காலி மனைக்கு மட்டும் ஒரு சதுர அடிக்கு ரூ.1500 தருவதாக தெரிவித்தனர். ஆனால் குடியிருப்புகளுக்கு எவ்வளவு தொகை என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
பிற மாநிலங்களில் விமானநிலைய விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீட்டு தொகை அதிகமாக வழங்கப்பட்டு உள்ளது. அது போல் கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு ஆர்ஜிதம் செய்யும் நிலத்துக்கும் அதிகதொகையை இழப்பீடாக வழங்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
பட்டணம் பஞ்சாயத்து பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், பட்டணம் பஞ்சாயத்து காவேரிநகர், ரெயின்போ காலனி, கற்பகவிநாயகர்நகர், கிருஷ்ணா கார்டன், திருமலை நகர் கணேஷ்நகர் உள்பட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கோவைக்கு தான் செல்லவேண்டும். ஆனால் கோவைக்கு செல்லும் இட்டேரி சாலை பராமரிப்பு இன்றி கடந்த சில ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இட்டேரி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தி.மு.க. குறிச்சி பகுதி கழக செயலாளர் குறிச்சி பிரபாகரன் தலைமையில் தி.மு.க.வினர் அளித்த மனுவில், கண்ணம்பாளையத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போதும் கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. எனவே போலீசார் அதிரடி சோதனை நடத்தி கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுவதை தடுக்கவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
மதுரையை தலைமை அலுவலகமாக கொண்ட நிதிநிறுவனத்தில் பணியாற்றும் கோவை மாவட்டத் தை சேர்ந்த முகவர்கள் அளித்த மனுவில், மதுரையை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கி வந்த ஒரு தனியார் நிதி நிறுவனத்திற்கு கோவையில் கிளை அலுவலகம் இருந்தது. இந்த நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய முதிர்வு பணபலன்களை வழங்காமல் மோசடி செய்து விட்டது. இது தொடர்பான வழக்கில் வாடிக்கையாளர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை வழங்கப்பட வில்லை. எனவே வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக பணப்பலன்கள்ை- கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கொடுத்த மனுவில், கோவையில் ஒருசில பகுதிகளுக்கு சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக கோவையில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு செட்டாப் பாக்ஸ் வழங்கப்படவில்லை. இது பற்றி சென்னையில் உள்ள அரசு கேபிள் டி.வி. அலுவலகத்தில் கேட்டால் சரியாக பதில் அளிப்பதில்லை. இதனால் பொதுமக்களுக்கு செட்டாப் பாக்ஸ் வழங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே கோவைக்கு உடனடியாக செட்டாப் பாக்ஸ் வழங்கி கேபிள் டி.வி. தொழிலை மட்டுமே நம்பி உள்ள எங்களின் வாழ்வாதாரத்தை காக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story