காதல் திருமணம் செய்த கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கைக்குழந்தையுடன் இளம்பெண் தர்ணா
வேடசந்தூர் அருகே காதல் திருமணம் செய்த கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கைக்குழந்தையுடன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள உசிலம்பட்டியை சேர்ந்த ஆலப்பன் என்பவரது மகன் முருகேசன் (வயது 25). இவர் திருவண்ணாமலை மாவட்டம் உன்னூரில் நிதி நிறுவனம் நடத்திக்கொண்டிருந்தபோது இருங்கல் கிராமத்தை சேர்ந்த முனிசாமி என்பவரது மகள் அமுல் (23) என்பவரை காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இத்திருமணத்திற்கு முருகேசனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் திருவண்ணாமலையிலேயே வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு உசிலம்பட்டிக்கு வந்த முருகேசன் மீண்டும் திருவண்ணாமலைக்கு திரும்பி போகவில்லை. அதன் பின்னர் செல்போனிலும் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை.
எனவே அமுல் தனது உறவினர்களுடன் உசிலம்பட்டியில் உள்ள முருகேசன் வீட்டுக்கு வந்தார். அப்போது முருகேசனின் பெற்றோர் அவர்களை திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை கணவருடன் சேர்த்து வைக்கவேண்டும் என்று கோரி அமுல் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் அமுல் நேற்று காலை 6 மணிக்கு உசிலம்பட்டியில் உள்ள கணவர் முருகேசன் வீட்டு முன்பு தனது 1½ வயது ஹரித்தி என்ற பெண் குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது முருகேசனின் பெற்றோர் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். எனினும் கணவருடன் சேர்த்து வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அமுல் தனது கைக்குழந்தையுடன் தொடர்ந்து 4 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு சம்பவ இடத்திற்கு எரியோடு போலீசார் விரைந்து வந்து தர்ணா போராட்டம் நடத்திய அமுலை வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்யுங்கள் என்று கூறி அனுப்பிவைத்தனர். இளம்பெண் தர்ணாவால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story