மொடக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
மொடக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஈரோடு,
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலதரகர்கள் நலச்சங்கத்தினர் ஈரோடு இடையன்காட்டு வலசு பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
அரசு அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்த நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குனரக அனுமதி பெறுவதற்கு வருகிற மே மாதம் 3-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த அனுமதி பெறுவதில் பிரச்சினை இருந்து வந்ததால் எங்களது தொழில் நலிவடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அரசு உத்தரவுபடி மிக குறுகிய கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குனரக அனுமதி பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
இதேபோல் அனுமதியற்ற தனிமனைகள் வரைமுறைப்படுத்த புதிய எளிமையான நடைமுறையை செயல்படுத்த வேண்டும். மனைகளை வரைமுறைப்படுத்த கோவை மண்டலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதைபோல் ஈரோடு மண்டலத்திலும் ஒன்றியம் தோறும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும். கூராய்வு கட்டணத்தை ரூ.500-ல் இருந்து ரூ.100 ஆக குறைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உள்பட்ட பெரலிமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-
ரெலிமேடு குட்டைகாடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது அந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும், அருகில் தனியார் பள்ளிக்கூடமும் உள்ளது. எனவே கடையை திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் கடையை திறப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மதுபான கடை திறப்பதை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும். எதிர்ப்பை மீறி திறக்க முயன்றால் கடையின் முன்பு தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம்.

ஓடத்துறை ஏரிநீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் வி.கே.வெங்கடாசலம் தலைமையில் விவசாயிகள் உள்பட பொதுமக்கள் சிலர் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-
கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை ஏரிக்கு கீழ்பவானி வாய்க்காலில் இருந்து கசிவுநீர் வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டன. குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஏரிக்கு கசிவுநீர் வருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையம் கொங்குநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக எந்தவொரு கருத்தும் பொதுமக்களிடம் கேட்கப்படவில்லை. எனவே புதிய கட்டிடத்தை நூலகமாக மாற்ற வேண்டும். மேலும், மீதமுள்ள இடத்தில் கூடுதலாக புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அங்கு கட்டிடம் கட்ட அனுமதிக்கக்கூடாது”, என்று கூறப்பட்டு இருந்தது.
ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் கொடுத்த கோரிக்கை மனுவில், “ஈரோடு மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதனால் அதிகமான உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறிஇருந்தார்.
இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 252 மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து மின்சாரம் தாக்கி இறந்த சிவகிரி ஜீவாநகரை சேர்ந்த சாருலதா என்பவரின் தந்தை செல்வகுமாருக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயராமன் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story