சத்தியமங்கலத்தில் சோகம்: பவானி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட 4 பேர் சாவு
சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். கோடைவிடுமுறையை கழிக்க உறவினர் வீட்டுக்கு வந்த இடத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையத்தை சேர்ந்தவர் அபு (வயது 35). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி பத்துருன்னிசா (32).
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் கோடை விடுமுறையை கழிப்பதற்காக அபுவின் வீட்டுக்கு அவருடைய உறவினரான நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த கலீம் என்பவரின் மகள்களான பர்வீன் (27), ரகமத்துன்னிசா (14), கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டையை சேர்ந்த ஜபார் என்பவரின் மகள் பிர்தோஸ் (12) ஆகியோர் வந்தனர்.
இந்த நிலையில் பத்துருன்னிசா, பர்வீன், ரகமத்துன்னிசா, பிர்தோஸ் ஆகியோர் குளிப்பதற்காக சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றுக்கு நேற்று சென்றனர்.
அங்கிருந்த திருமண மண்டபத்தின் அருகில் உள்ள இடத்தில் அனைவரும் ஆற்றில் மகிழ்ச்சியாக குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஆழமான பகுதிக்கு பிர்தோஸ் சென்றார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் தத்தளித்தபடி மூழ்க தொடங்கினார்.
இதைப்பார்த்த பத்துருன்னிசா அவரை காப்பாற்ற முயன்றார். அவரால் முடியவில்லை. மேலும் அவரும் தண்ணீரில் மூழ்கினார். அப்போது கைகளை உயர்த்தியபடி ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று அபயக்குரல் எழுப்பினார்.
உடனே அங்கிருந்த பர்வீன், ரகமத்துன்னிசா ஆகியோரும் பத்துருன்னிசாவை காப்பாற்றுவதற்காக சென்றனர். அவர்களுக்கும் நீச்சல் தெரியாததால் ஆற்றில் மூழ்கினர்.
இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கி இறந்தவர்களின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மாலை 5 மணிக்கு பத்துருன்னிசா, ரகமத்துன்னிசா ஆகியோரின் உடல்களையும், 6 மணிக்கு பர்வீன் உடலையும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். பிர்தோசின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இரவு நேரமாகிவிட்டதால் மின் விளக்குகள் உதவியுடன் பிர்தோஸ் உடலை தேடும் பணி நடைபெற்றது.
இரவு 9 மணி அளவில் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உடலை தேடும் பணி நடைபெற உள்ளது.
மீட்கப்பட்ட பத்துருன்னிசா, ரகமத்துன்னிசா, பர்வீன் ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோடை விடுமுறையை கழிக்க வந்த இடத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் இறந்த சம்பவம் கோட்டுவீராம்பாளையம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Related Tags :
Next Story