ராஜபாளையம் அருகே குடியிருப்பில் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து வசிக்கக்கோரி மனு
ராஜபாளையம் அருகே குடியிருப்பில் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து வசிக்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.
விருதுநகர்,
ராஜபாளையம் அருகே சேத்தூரில் உள்ள துப்புரவு பணியாளர்கள் காலனியில் வசிப்பவர்கள்குடும்பத்தினருடன் நேற்று விருதுநகருக்கு வந்து மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த 54 குடும்பத்தினர் கிராம பஞ்சாயத்துகளில் குறைந்த ஊதியத்தில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றோம். நாங்கள் சேத்தூரில் உள்ள துப்புரவு பணியாளர் காலனியில் 80 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். எங்கள் குடும்பத்து குழந்தைகள் அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். நாங்கள் முன்பு சேத்தூர் பேரூராட்சியில் ஒப்பந்தஅடிப்படையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்தோம். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் கடந்த 3 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. இதனால் வடக்கு தேவதானம், தெற்குதேவதானம், முத்துசாமிபுரம், முகவூர், கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமப்பஞ்சாயத்துகளில் குறைந்த ஊதியத்தை பெற்றுக்கொண்டு துப்புரவு பணி செய்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். இந்த நிலையில் சேத்தூர் பேரூராட்சி நிர்வாகம் எங்களை துப்புரவு பணியாளர் காலனி குடியிருப்பில் இருந்து வெளியேறுமாறு தொடர்ந்து மிரட்டி வருகிறது. திடீரென குடியிருப்புகளை காலி செய்ய வற்புறுத்தினால் நாங்கள் குடியிருக்க வீடு இல்லாதநிலையில் மிகுந்த பாதிப்புக்குள்ளாவோம். எனவே எங்களை தொடர்ந்து அங்கு வசிக்க உத்தரவிட வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் வேறு இடத்தில் குடியிருப்பு கட்டித் தரநடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story