திருப்புவனம் கூட்டுறவு சங்கத்தில் அ.தி.மு.க., த.மா.கா.வினர் உள்ளிருப்பு போராட்டம்
போலி வாக்காளர்களை நீக்கக்கோரி திருப்புவனம் கூட்டுறவு சங்கத்தில் அ.தி.மு.க., த.மா.கா.வினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
திருப்புவனம்,
திருப்புவனம் போலீஸ் நிலையம் எதிரே உழவர் பணி கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் நேற்று நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு நடைபெற இருந்த நிலையில், காலை 8 மணி அளவில் சங்க செயலாளர் ராமமூர்த்தி, தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயகுமார் ஆகியோர் வேட்புமனு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது த.மா.கா. மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோர் தலைமையில் கட்சிகளின் நிர்வாகிகள், விவசாயிகள் திரளானோர் உள்ளே புகுந்து தேர்தல் அதிகாரியிடம் போலி வாக்காளர்கள், இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும், சங்க எல்லையில் இல்லாதவர்களையும் நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இந்த போராட்டம் குறித்து அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுகுமாறன்(மானாமதுரை), இளங்கோவன்(நில அபகரிப்பு பிரிவு) ஆகியோர் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தாமதமாகவே அக்கட்சிகளை சேர்ந்தவர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு திரண்டனர். இதனால் தேர்தலை ரத்துசெய்வதாக அறிவித்துவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
முன்னதாக தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தனது கட்சியினரோடு வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக சென்றார். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கூட்டுறவு சங்கத்தில் போராட்டம் நடப்பதாக கூறி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் சமரசம் பேசி காத்திருக்குமாறு கூறினார். ஆனால் நேரம் ஆகவே மீண்டும் அவர்கள் ஊர்வலமாக கூட்டுறவு சங்கத்திற்கு சென்றனர். அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என்றுகூறி துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் அவர்களை தடுத்து சமாதானம் செய்து அனுப்பிவைத்தார். இதனைத்தொடர்ந்து அவர்கள் கலைந்துசென்றனர்.

Related Tags :
Next Story