குடிநீர் வசதி செய்து தரக்கோரி கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் தர்ணா
குடிநீர் வசதி செய்து தரக்கோரி கிராம சபை கூட்டத்தில் காலி குடங்களுடன் கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பந்தலூர்,
குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலி குடங்களுடன் சேரங்கோடு கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலூர் தாலுகா சேரங்கோடு ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம் சேரம்பாடி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விசுவம் தலைமை தாங்கினார். செயலாளர் சஜீத், ஊராட்சி ஒன்றிய கணக்காளர் சைனி, வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் சாலை, நடைபாதை, தெருவிளக்கு உள்பட பல்வேறு வசதிகள் செய்து தரக்கோரி மனுக்களை அளித்தனர். இந்த நிலையில் எருமாடு அருகே வீட்டியாட்டு குன்னு பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50 பேர் காலி குடங்களுடன் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
வீட்டியாட்டுகுன்னு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இதுவரை குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அந்த பணியும் பாதியில் விடப்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. பின்னர் குடிநீர் வசதி கேட்டு கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது கிராமசபை கூட்டத்தில் வீட்டியாட்டுகுன்னு கிராமத்துக்கு குடிநீர் வசதி செய்து தரப்படும் என தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குடிநீர் வசதி செய்து தரப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர். தொடர்ந்து கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தோட்டக்கலை துறை உதவி அலுவலர் வினோத், கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் கணையேந்திரன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல் நெலாக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் தலைமை தாங்கினார். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் மதன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story