இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து ஓட்ட வேண்டும் சாலை பாதுகாப்பு வார விழாவில் வலியுறுத்தல்
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து ஓட்ட வேண்டும் என்று சாலை பாதுகாப்பு வார விழாவில் வலியுறுத் தப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகர காவல் துறை சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. இதையொட்டி சாலை பாதுகாப்பு விதி முறைகள் குறித்த துண்டு பிர சுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. அதன்படி, கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாது காப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
இதில் போக்குவரத்து காவல் துறை சப்-இன்ஸ் பெக்டர் ராஜாமன்னார், டவுன் சப் -இன்ஸ்பெக்டர்கள் அமுதா, திருப்பதி உள்ளி ட்டோர் கலந்து கொண்டு, இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும், சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்ட வேண்டும் உள்ளிட்ட பல் வேறு சாலை விதிகள் அடங்கிய துண்டு பிர சுரங்களை வழங்கி னார்கள்.
கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில் வேலன், தலைமையில், ஆய்வாளர்கள் குமார், செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில், சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், பயிற்றுனர்கள், வாகன ஓட்டிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, “தலைக் கவசம் அணியாமல், இருசக்கர வாகனம் ஓட்ட மாட்டேன். குடிபோதையில் வாகனம் ஓட்ட மாட்டேன், சாலை விதிகளை முறையாக கடைபிடித்து, விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவேன் என்பது உள்ளிட்ட உறுதி மொழிகளை ஏற்றனர்.
பின்னர் கிருஷ்ணகிரி சுங்க சாவடியில் ஹெல்மெட் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வாகன ஓட்டிகளுக்கு “வாகனம் ஓட்டும் போது, சாலையில் சரியான வேகத்தில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள குறிப்பாக ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும். வாகனங்களை முந்தி செல்வதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி விட வேண்டும். சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து, விபத்தில்லா பயணத்தை ஏற்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுரை கூறினார்கள்.
பர்கூர் போலீஸ் நிலையம், பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், கந்திக்குப்பம் போலீஸ் நிலையம் சார்பில் பர்கூர் பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை யொட்டி இருசக்கர வாகன ஊர்வலம் நடந்தது. இதில் போலீசார் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்டினர். இந்த ஊர்வலத்தை பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பர்கூர் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி குமார், தனிப்படை பிரிவு தலைமை காவலர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பேரணியில், விபத்தை தடுப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப் புணர்வு பிரசுரம் வழங்கப்பட்டது.
சாலை பாதுகாப்பு வார விழாவை யொட்டி வேப்பன பள்ளியில் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் மேற் கொண்டனர்.விபத்துக்களை தடுக்கும் வகையில் சாலையில் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் பற்றி பொதுமக் களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வேப்பனப்பள்ளி போலீசார் நகரின் முக்கிய பகுதிகளான பஸ் நிறுத்தங்கள் குப்பம் சாலை சந்திப்பு ஆகியவை இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story