பழைய இரும்பு பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மாதிரி ரெயில்
பயணிகளை கவரும் வகையில் ரெயில் மாதிரியை தயார் செய்த தொழிலாளி, அதை கோட்ட ரெயில்வே மேலாளரிடம் ஒப்படைத்தார்.
மதுரை,
சுற்றுலா பயணிகளை கவர்வதற்காகவும், பயணிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் மதுரை ரெயில்நிலையத்தை அழகுபடுத்தும் முயற்சியில் மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2-வது பிளாட்பாரத்தில் உள்ள தானியங்கி நகரும் படிக்கட்டுகள் அமைந்துள்ள பகுதியில் தனியார் பங்களிப்புடன் வண்ண ஓவியம் வரையப்பட்டுள் ளது. அதனை தொடர்ந்து ரெயில் நிலையத்தில் சிறுவர், சிறுமிகளை கவருவதற்காக பல்வேறு மாதிரிகளை வைக்க மதுரை கோட்ட மேலாளர் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதையடுத்து, ரெயில்வேயில் வீணாகி கிடக்கும் இரும்பு பொருள்களை கொண்டு ரோபோ, சைக்கிள், ரெயில் என்ஜின் போன்ற மாதிரிகள் மெக்கானிக்கல் பிரிவு மூலம் வடிவமைக்கப்பட்டன. இந்த நிலையில், மாதிரிகள் அனைத்தும் மதுரை ரெயில்நிலையத்தில் பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதால், இது போன்ற மாதிரிகளை செய்து தர விரும்பும் ஆர்வமுள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள், மாணவ, மாணவிகள் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கடந்த 18-ந் தேதி தினத்தந்தியில் செய்தி வெளியானது.
அதனை தொடர்ந்து மதுரை வடக்கு வெளிவீதியில் உள்ள இருசக்கர, நான்கு சக்கர வாகன ஸ்டிக்கர் கடையில் தொழிலாளியாக வேலை பார்க்கும் எம்.ஆன்டணி என்பவர், ஆளில்லாத ரெயில்வே கிராசிங்கை கடப்பது குறித்த மாதிரியை உருவாக்கியுள்ளார். பழைய பொருள்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மாதிரியை அவர் நேற்று மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நீனு இட்டியேராவிடம் ஒப்படைத்தார்.
தினத்தந்தியில் வந்த செய்தியை பார்த்து வீட்டில் இருந்து பழைய இரும்பு பொருள்களை வைத்து இந்த மாதிரியை உருவாக்கியதாக அவர் தெரிவித்தார். அவருக்கு கோட்ட ரெயில்வே மேலாளர் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

Related Tags :
Next Story