பெங்களூருவில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: ரசிகர்களின் 15 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு, மர்மநபர்களுக்கு வலைவீச்சு


பெங்களூருவில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: ரசிகர்களின் 15 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு, மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 May 2018 6:51 AM IST (Updated: 2 May 2018 6:51 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்ற ரசிகர்களின் 15 மோட்டார் சைக்கிள்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

பெங்களூரு,


இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பங்கேற்கும் போட்டிகள் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று பெங்களூருவில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

முன்னதாக, சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிகளை பார்க்க சென்ற ரசிகர்களின் 15 மோட்டார் சைக்கிள்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. மைதானத்தை சுற்றியுள்ள இடத்தில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து கப்பன்பார்க் போலீசில் மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் புகார்கள் அளித்துள்ளனர். இந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story