8 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 359 போலீசார் பணியிட மாற்றம்


8 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 359 போலீசார் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 3 May 2018 4:30 AM IST (Updated: 3 May 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 8 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 359 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீசாருக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதுபோல் அதிகமான நாட்கள் ஒரே இடத்தில் பணியில் இருந்த போலீசாருக்கு பணியிட மாற்றம் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதில் 8 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதன்படி வெள்ளோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.லோகநாதன் அறச்சலூர் போலீஸ் நிலையத்திற்கும், பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டி.ஜி.ராம்பிரபு காஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்திற்கும், ஈரோடு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வி.சங்கர் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கும், சித்தோடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.வி.சுஜாதா பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.சங்கர் அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கோபிசெட்டிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி கடத்தூர் போலீஸ் நிலையத்திற்கும், கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டி.காந்திமதி கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்திற்கும், ஈரோடு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏ.எல்.சரோஜினி ஈரோடு மாவட்ட குற்ற ஆவணக்காப்பு பிரிவு போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 351 போலீசார் மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். எனவே 8 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 359 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட போலீசாரின் விவரங்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு உள்ளது.

Next Story