நங்கவள்ளி அருகே மரத்தில் கார் மோதி 2 சிறுமிகள் பலி
நங்கவள்ளி அருகே மரத்தில் கார் மோதியதில் 2 சிறுமிகள் பலியானார்கள். டிரைவர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேச்சேரி,
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே வெள்ளக்கல்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 28). இவர் தனது உறவினர்களுடன் மேட்டூர் அருகே உள்ள ஒரு கோவில் கும்பாபிஷேகத்துக்கு சென்றார்.
விழா முடிந்ததும் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை சக்திவேல் ஓட்டினார்.
நங்கவள்ளி அருகே பெரியசோரகை பாலம் அருகே நேற்று மாலை வந்தபோது காரின் பின்பக்க டயர் பஞ்சர் ஆனது. இதனால் நிலைதடுமாறிய கார் அருகில் உள்ள பனைமரத்தில் மோதியது. இதில் சக்திவேல், அவருடைய மகள் அஸ்மிதா (3), மகன் அஸ்விந்த் (6 மாதம்), தாய் பொன்னம்மாள் (60), உறவினர் பானுமதி (35), சவுந்தர்யா (30), அருள்குமார் மகள் ஸ்ரீனிதா (3), ரமேஷ் மகள் அம்பிகா (10) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் அவர்களை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீனிதா, அம்பிகா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மற்ற 8 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story