ஒவ்வொரு மனிதனுக்கும் தாய் போல், தாய் மொழியும் முக்கியம் தஞ்சை சரக டி.ஐ.ஜி. பேச்சு
ஒவ்வொரு மனிதனுக்கும் தாய் போல், தாய் மொழியும் முக்கியம் என்று தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்திரை பெருவிழா துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது. விழாவில் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் கலந்து கொண்டு கலை, இலக்கிய மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு மனிதனுக்கும் தாய் எப்படி முக்கியமானதோ, அதுபோல தாய்மொழியும் முக்கியமானதாகும். தன்னுடைய தாய் மொழிக்காக ஒரு இனம் போராடுகிறது என்றால் அது தமிழாக மட்டும்தான் இருக்க முடியும். தாய்மொழி பேசக்கூடிய மக்கள் தொகையில் 1000 மொழிகள் இருக்கின்றன. அதில் 18-வது இடத்தில் இருக்கக்கூடியது தமிழ் மொழியாகும்.
தமிழை சொல்ல வேண்டுமானால் இதற்கு இணையான செம்மொழி இல்லை. இது வரலாற்று உண்மை. கி.மு. 300 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட சங்க இலக்கியங்கள், குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஆத்திச்சூடி, திருக்குறள் ஆகியவை இப்போதும் நமது குழந்தைகள் படிக்கின்ற அளவுக்கு இருக்கிற நிலையை பார்க்கும்போது அதுதான் நமது மொழியினுடைய செம்மையாகும்.
2017-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில், இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மொழிகளில் முதன்மையாக இருக்கக்கூடிய மொழி தமிழ்மொழி. அதேபோல் இணையதளத்திலும் முதன்மை மொழியாக தமிழ் மொழி இருக்கிறது. இப்படி திறமையுள்ள மொழியை படித்து அதில் ஆராய்ச்சி பட்டம் பெற்று உங்களுடைய முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறீர்கள்.
ஆனால் அந்த மொழிக்கு நாம் என்ன செய்கின்றோம் என்றால் நீங்கள் கடினமாக படித்து இந்த புகழை வெளி உலகிற்கு கொண்டு செல்வது உங்களுடைய கடமையாக கருத வேண்டும். முதலில் நாம் எப்படி படிக்கின்றோம் என்பது மிக முக்கியம். முதலில் என்னவாக இருக்க போகின்றோம் என்பதை முடிவு செய்வதே நாம்தான். நம் எண்ணம் நிறைவேற வேண்டுமானால் உங்களுடைய கடுமையான உழைப்பை தர வேண்டும்.
தனிமனித வாழ்க்கைக்கு நான்கு முக்கியமானவையாகும். முதலாவது வாழ்க்கையில் நாம் என்னவாக ஆக வேண்டும் என்ற குறிக்கோள். இரண்டாவது அறிவுத்திறன். அதாவது அந்த துறையில் அதிக நூல்கள் படிப்பதன் மூலம் அறிவுத்திறன் வளரும். மூன்றாவது கடின உழைப்பு. நான்காவது விடா முயற்சி. இந்த நான்கையும் மனதில் வைத்துக்கொண்டு உழைத்தால் நீங்களும் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பல்வேறு நூல்களை துணைவேந்தர் வெளியிட அதை டி.ஐ.ஜி. பெற்றுக்கொண்டார். முன்னதாக பல்கலைக்கழக பதிவாளர் முத்துக்குமார் வரவேற்று பேசினார். முனைவர் ஆதித்தன் இணைப்புரை வழங்கினார். முடிவில் முனைவர் இளையாப்பிள்ளை நன்றி கூறினார்.

Related Tags :
Next Story