மேலாண்மை வாரியம் அமைத்து காவிரி நதிநீரை பெற்றுத்தருவோம் - முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் பேச்சு
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தருவோம் என்று முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம், சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கண்ணப்பன் பேசியதாவது:-
1972-ம் ஆண்டு அ.தி.மு.க. உருவானபோது இருந்த அதே உற்சாகமும், எழுச்சியும் இன்றும் தொண்டர்கள் மத்தியில் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்காக என்றுமே பாடுபடும். 1979-ம் ஆண்டு கருணாநிதி காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விட்டதால் தான் இன்று காவிரி தண்ணீரை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அ.தி.மு.க. காவிரி தண்ணீருக்கு உயிர் கொடுத்த இயக்கமாகும்.
காவிரி நீருக்காக ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டு சென்று உரிமையை பெற்று, அதை அரசிதழிலும் வெளியிட்டார். அ.தி.மு.க. ஆட்சியை கலைத்துவிட்டு எப்படியாவது பதவிக்கு வந்துவிடலாம் என்று தி.மு.க. எண்ணுகிறது. ஜெயலலிதா ஏற்படுத்திதந்த ஆட்சியை 5 ஆண்டுகள் கண்டிப்பாக நடத்துவோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்துக்கு சேர வேண்டிய காவிரிநீரை பெற்றுத்தருவோம். மத்திய அரசுடன், மாநில அரசு இணக்கமாக செல்வதாக சிலர் கூறுகின்றனர். மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும்போது மத்திய அரசுடன் இணக்கமாக செல்வது தவறு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் காளிதாஸ், பேச்சாளர் வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகானந்தம், கற்பகம், குணசேகரன், சந்திரன், மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கோபி, மருத்துவ அணி செயலாளர் கோட்டையன், நகர செயலாளர் ஆனந்தன், தேவகோட்டை ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story