காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்


காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 3 May 2018 5:00 AM IST (Updated: 3 May 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

அவனியாபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி செல்ல சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்த ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

இந்தியா முழுவதும் உள்ள மாவட்டங்களில் 115 மாவட்டங்கள் பின்தங்கியுள்ளன. அந்த மாவட்டங்களின் நிலையை உயர்த்த மத்திய அரசு நிதி உதவி செய்து வருகிறது. இந்த பட்டியலில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு நான் பொறுப்பேற்று உள்ளேன். மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தாமல் தாமதம் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த 2 மாவட்டங்களில் 36 கிராமங்களில் ஆதிதிராவிட சமுதாயத்தினர் அதிகம் வசித்து வருகின்றனர். அந்த சமுதாயத்திற்கு அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்ய மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது. கர்நாடக தேர்தலை மனதில் வைத்து இதில் மத்திய அரசு செயல்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியின்போதும் வாரியம் அமைக்கவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. அப்போது ஏன் கேள்வி எழுப்பவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுடன் பேசி நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு விபத்து ஏற்படுவதை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story