சென்னை புளியந்தோப்பில் கொலை முயற்சி, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
புளியந்தோப்பில் கொலை முயற்சி மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை தேடிவருகிறார்கள்.
திரு.வி.க.நகர்,
சென்னை புளியந்தோப்பு, கே.பி.பார்க், ஐ பிளாக் பகுதியில் வசிப்பவர் கருணாகரன் (வயது 27). இவர் நேற்று முன்தினம் மாலை தட்டாங்குளம், ருத்ரப்பா தெருவில் உள்ள டீக்கடையில் நண்பர் மணிகண்டன் என்பவருடன் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் தாக்கியது.
அவரது அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் அங்கு கூடியதைத் தொடர்ந்து மர்மகும்பல் தப்பி ஓடியது. கை விரல்கள், முதுகு ஆகிய இடங்களில் அவருக்கு வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. பொதுமக்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து கருணாவின் தந்தை அண்ணாமலை புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவியிடம் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேரையும் தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் புளியந்தோப்பு பிரகாஷ்ராஜ் காலனியை சேர்ந்த பெயிண்டர் செந்தில் (25) என்பவர் மோட்டார் சைக்கிளில் பெயிண்ட் வாங்குவதற்காக அஷ்டபுஜம் சாலை வழியாக டவுட்டன் சென்றுகொண்டிருந்தார். அப்போது 4 பேர் கும்பல் ஆட்டோவில் வந்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்துக்கொண்டு சென்றது.
இதுபற்றி அவர் புளியந்தோப்பு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் 2 சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல் தான் என தெரியவந்தது. சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மர்மகும்பலை தேடிவந்தனர். நேற்று மதியம் 2 மணியளவில் பேசின்பிரிட்ஜ் அருகே பதுங்கியிருந்த அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்தனர். இதில் 3 பேர் பிடிபட்டனர், ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
போலீசார் விசாரணையில், அவர்கள் புளியந்தோப்பு கே.எம்.கார்டன் 6-வது தெருவை சேர்ந்த அப்பு என்கிற தீபக் (25), குமாரசாமி ராஜாபுரம் 3-வது தெருவை சேர்ந்த கருப்பா என்கிற ரகுபதி (25), சூளை தட்டாங்குளம், அய்யாவு ஆச்சாரி தெருவை சேர்ந்த சுரேஷ் (22) என்பது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக கருணாகரனை கொலை செய்ய வந்ததாகவும், பொதுமக்கள் கூடிவிட்டதால் பாதியில் தப்பியோடியதாகவும் கூறினர்.
அவர்கள் பயன்படுத்திய ஆட்டோ, 3 கத்திகள் மற்றும் வழிப்பறி செய்த ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மதன்ராஜ் என்பவரை தொடர்ந்து தேடிவருகின்றனர்.

Related Tags :
Next Story