ஓட்டப்பிடாரம் அருகே மாட்டு வண்டி போட்டி


ஓட்டப்பிடாரம் அருகே மாட்டு வண்டி போட்டி
x
தினத்தந்தி 4 May 2018 2:30 AM IST (Updated: 3 May 2018 5:49 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டு வண்டி போட்டி நடந்தது.

ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டு வண்டி போட்டி நடந்தது.

கொடைவிழா 

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள காசிலிங்கபுரம் காளியம்மன் மற்றும் சந்தனமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்தது. விழாவையொட்டி மாட்டு வண்டி போட்டி நடந்தது. போட்டிக்கு ஊர் தலைவர் அய்யத்துரை தலைமை தாங்கினார். ஊர் துணை தலைவர் நடராஜன், கிராம கோவில் கமிட்டி பொருப்பாளர்கள் சின்னத்துரை, பொன்னச்சாமி, முருகையா, பத்திரன், ஆறுமகம், ஏ.முருகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரிய மாட்டு வண்டி போட்டி 

போட்டி பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி ஆகிய 2 பிரிவுகளாக நடந்தது. பெரிய மாட்டு வண்டி போட்டி 15 கிலோமீட்டர் தூரமும், சிறிய மாட்டு வண்டி போட்டி 9 கிலோ மீட்டர் தூரமும் நடந்தது. போட்டிகள் காசிலிங்கபுரம்–தெய்வச்செயல்புரம் ரோட்டில் நடந்தது. பெரிய மாட்டு வண்டி போட்டியை மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானசம்பந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 9 வண்டிகள் கலந்து கொண்டன.

இந்த போட்டியில் நெல்லை மூளிகுளத்தை சேர்ந்த பிரபு வண்டி முதல் பரிசு ரூ.21 ஆயிரத்தை பெற்றது. 2–வது பரிசு ரூ.15 ஆயிரத்தை சிந்தலக்கட்டை செல்வராஜ் வண்டியும், 3–வது பரிசு ரூ.13 ஆயிரத்தை மறுகால்குறிச்சி பொன்னையா வண்டியும் பெற்றது.

வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு முன்னால் பஞ்சாயத்து தலைவர் சின்னத்தாய், காசிலிங்கபுரம் தொழில்அதிபர்கள் தங்கப்பாண்டி, மணி ஆகியோர் பரிசு வழங்கினர்.

சிறிய மாட்டுவண்டி 

தொடர்ந்து நடந்த சிறிய மாட்டு வண்டி போட்டியை மணியாச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 13 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசு ரூ.19 ஆயிரத்தை வடக்கு காரசேரி ஓடக்காரன் வண்டியும், 2–வது பரிசு ரூ.14 ஆயிரத்தை மறுகால்குறிச்சி சுப்பம்மாள் வண்டியும், 3–வது பரிசு ரூ.11 ஆயிரத்தை பாளையங்கோட்டை வெங்கடேஷ் வண்டியும் பெற்றன. வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு முன்னால் யூனியன் கவுன்சிலர் காசி, காசிலிங்கபுரம் தொழில்அதிபர் நீதிராஜ், முறம்பன் புதியதமிழகம் கிளை செயலாளர் தர்மராஜ் ஆகியோர் வழங்கினர்.

இந்த போட்டியை காண காசிலிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக வந்து இருந்தனர்.

Next Story