இன்று நடக்கிறது அம்மா திட்ட சிறப்பு முகாம்


இன்று நடக்கிறது அம்மா திட்ட சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 4 May 2018 2:00 AM IST (Updated: 3 May 2018 6:03 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

அம்மா திட்ட முகாம் 

அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அம்மா திட்ட சிறப்பு முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த தாசில்தார் தலைமையில் நடக்கிறது. இந்த வாரத்துக்கான முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா தெற்கு சிலுக்கன்பட்டி, செந்திலாம்பண்ணை கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா திருப்புளியங்குடி கிராமத்திலும் திருச்செந்தூர் தாலுகா காயல்பட்டினம் தென்பாகம் கிராமத்திலும், சாத்தான்குளம் தாலுகா பள்ளக்குறிச்சியிலும், கோவில்பட்டி தாலுகா நாலாட்டின்புத்தூரிலும், விளாத்திகுளம் தாலுகா எம்.சண்முகபுரத்திலும், எட்டயபுரம் தாலுகா சுரைக்காய்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களிலும், ஓட்டப்பிடாரம் தாலுகா மேலப்பாண்டியாபுரத்திலும், கயத்தாறு தாலுகா குருமலையிலும் முகாம் நடக்கிறது.

கோரிக்கை மனு 

இந்த முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு–இறப்பு சான்றுகள், சாதி சான்றுகள் மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் இந்த முகாம்களில் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். 

Next Story