கிராம சுயாட்சி இயக்க திட்டங்களை 29 பஞ்சாயத்துகளில் முழுமையாக செயல்படுத்த முடிவு

கிராம சுயாட்சி இயக்க திட்டங்களை 29 பஞ்சாயத்துகளில் முழுமையாக செயல்படுத்த முடிவு
x
தினத்தந்தி 4 May 2018 3:00 AM IST (Updated: 3 May 2018 6:55 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட 29 கிராம பஞ்சாயத்துகளில் மத்திய அரசின் கிராம சுயாட்சி இயக்க திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, அரசு முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் தெரிவித்தார்.

நெல்லை, 

ஆய்வு கூட்டம் 

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிராம சுயாட்சி இயக்க திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. அரசின் முதன்மை செயலாளரும், நெல்லை மாவட்ட கண்காணிப்பாளருமான ராஜேந்திரகுமார் தலைமை தாங்கினார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் அரசின் முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் பேசியதாவது:–

முழுமையாக செயல்படுத்த முடிவு 

நெல்லை மாவட்டத்தில் கிராம சுயாட்சி இயக்கத்தில் மத்திய அரசின் அனைவருக்கும் வங்கி கணக்கு, பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரி விபத்து காப்பீட்டு திட்டம், அனைவருக்கும் எரிவாயு இணைப்பு வழங்குதல் எல்.இ.டி. பல்பு மானிய விலையில் வழங்குதல், மின் இணைப்பு வழங்குதல், சுகாதாரத்துறையின் மூலம் கார்ப்பிணி மற்றும் 2 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி ஆகிய 7 திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இந்த மத்திய அரசின் திட்டம் 29 கிராம பஞ்சாயத்துகளில் 100 சதவீதம் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், கிராம சுயாட்சி இயக்க மத்திய பார்வையாளர்கள் கலாதரன், பத்மநாபன், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி, முன்னோடி வங்கி மேலாளர் கஜேந்திரநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story