குளச்சலில் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வந்த இளம்பெண் திடீர் சாவு
குளச்சலில் தனியார் ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் திடீரென இறந்தார். இதையடுத்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குளச்சல்,
குளச்சல் அருகே ஆலஞ்சி ஏழுவிளைப்பற்று பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் ஜோஸ். இவரது மனைவி சபிதா (வயது31). இவர்களுக்கு அசரியா (5), அனனியா (2½) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஆல்வின் ஜோஸ் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளி வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு சபிதா திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று காலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அவரை உறவினர்கள் ஆம்புலன்சு மூலம் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சபிதாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து சபிதாவின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி மீண்டும் முதலில் சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சபிதாவின் பிணத்துடன், கணவரும் உறவினர்களும் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, தவறான சிகிச்சையால்தான் அவர் இறந்ததாக புகார் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறவினர்களிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து, சபிதாவின் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஆல்வின் ஜோஸ் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story