அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக தமிழக அரசு செயல்படுகிறது கூட்டத்தில் அமைச்சர் பேச்சு
அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக தமிழக அரசு செயல்படுகிறது என்று மே தின பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேசினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்ட அண்ணா பொது தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஓசூர் அருகே ஜூஜூவாடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் கே.நாகராஜ் தலைமை தாங்கினார். ஓசூர் நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.நாராயணன், மாவட்ட பிரதிநிதி சிட்டிஜெகதீசன், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய முன்னாள் ஆலோசனைக்குழு உறுப்பினர் இளஞ்சூரியன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட அண்ணா பொது தொழிலாளர் சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை, நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நிதி உதவி, சலவைப்பெட்டி உள்ளிட்ட நல உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, தொழிலாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அதேபோன்று இன்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழிலாளர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நமது மாவட்டத்திற்கும், ஓசூருக்கும் நிறைய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஓசூர், தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் இப்பகுதி மேலும் முன்னேற்றம் காண வேண்டும் என்று இந்த அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. சூளகிரி அருகே 3-வது சிப்காட் தொடங்கப்படவுள்ளது. அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் இந்த அரசு, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறது. மக்களின் நலனுக்காக பாடுபட்டு வரும் இந்த அரசுக்கு, மக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், அசோக்குமார் எம்.பி, தலைமைக்கழக பேச்சாளரும், திரைப்பட இயக்குனருமான பி.சி.அன்பழகன், கட்சியின் செய்தி தொடர்பாளர் டாக்டர் கோ.சமரசம், பர்கூர் எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் பேசினார்கள். இதில், மாவட்ட பாசறை தலைவர் மாரேகவுடு, முன்னாள் நகராட்சி தலைவர் ராமு, மாவட்ட பொருளாளர் கே.நாராயணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து, கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

Related Tags :
Next Story