ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தேவையான முயற்சிகளை எடுத்த ஒரே கட்சி அ.தி.மு.க.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு தேவையான முயற்சிகளை எடுத்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
திருவிடைமருதூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரியில், காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதர் கோவில் அமைந்து உள்ளது. இங்கு நேற்று காலை அமைச்சர் பாண்டியராஜன் தனது மனைவியுடன் வந்து இருந்தார். அங்கு வழிபட்ட. பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு தேவையான 6 மில்லியன் டாலருக்கு மேல் நிதி சேர்ந்து விட்டது. தமிழக அரசின் சார்பில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ரூ.10 கோடி வழங்கப்பட்டது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய எல்லா முயற்சிகளும் எடுத்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான். சிங்கப்பூரை சேர்ந்த அம்ருத் என்ற தமிழர் தலைமையில் தமிழ் இருக்கை அமைய உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஆய்வறிக்கைகள் உலக தரத்திற்கு கொண்டு செல்லப்படும். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் 25 நாடுகளுக்கும் மேல் உள்ள தமிழர்கள் 9200 பேர் தமிழ் இருக்கைக்காக நிதி வழங்கியுள்ளனர். ஊர்கூடி தேர் இழுப்பதுபோல் இதனை சாதித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அமைச்சர் நேற்று காலை சூரியனார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். நேற்று மதியம் ராகுகால நேரத்தில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலுக்கு வந்து ராகுபகவானுக்கு நடைபெற்ற பாலாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அமைச்சருடன் திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. தவமணி ஆகியோர் வந்திருந்தனர்.

Related Tags :
Next Story