பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான ‘ஆன்லைன்’ பதிவு மையம் தொடங்கியது
திருச்சியில் உள்ள பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மையம் தொடங்கப்பட்டது.
திருச்சி,
தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
இந்த கல்வியாண்டு முதல் ‘ஆன்லைன்’ மூலம் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்தல் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இணைய தள வசதி இல்லாதவர்களுக்கு இலவசமாக பதிவு செய்வதற்கு வசதியாக தமிழகத்தில் 42 உதவி மையங்களை அண்ணா பல்கலைக்கழகம் அமைத்து உள்ளது.
திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘தமிழக அரசு உயர் கல்வியின் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவினை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். இது எலக்ட்ரானிக் யுகமாகும். இந்த முறை மூலம் விண்ணப்பம் செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் தீர்க்கப்படும்’ என்றார்.
அண்ணா பல்கலைக்கழக திருச்சி உறுப்பு கல்லூரியின் டீன் செந்தில்குமார் பேசுகையில், ‘ஆன்லைன் விண்ணப்ப முறை மூலம் இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை அதிகரிக்கும். திருச்சி மையத்திற்கு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பங்கள் மே 3-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். ஜூன் முதல்வாரம் விண்ணப்பதாரர்களின் ‘ரேண்டம்’ எண் வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை மாதம் முதல்வாரம் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் தாங்கள் விரும்பிய கல்லூரியை தேர்வு செய்ய 3 வாய்ப்பு வழங்கப்படும். ஜூலை மாதம் 28-ந்தேதிக்குள் விண்ணப்பதாரர்களின் இ-மெயில் முகவரிக்கு கல்லூரி ஒதுக்கப்பட்டதற்கான ஆணை அனுப்பப்படும்’ என்றார்.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்காக மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வந்து இருந்தனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்த மாணவர் கீர்த்திவாசன் என்பவர் கூறுகையில், “ஆன்லைன் பதிவு எளிதாக இருக்கிறது. இது எனக்கு புது அனுபவமாகும். திருச்சியில் கலந்தாய்வு மையம் அமைக்கப்பட்டு இருப்பதால் நான் பெற்றோருடன் சென்னைக்கு செல்லவேண்டிய வேலை மிச்சமாகிறது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் நேற்று 25 மாணவ, மாணவிகளும், சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 3 மாணவர்களும் ஆன்லைன் மூலம் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story