அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் கலெக்டர் அறிவுரை
வேலூர் மாவட்டத்தில் கடும் வெயிலுடன் அனல் காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று கலெக்டர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூர்,
வேலூரில் கோடை காலத்தில் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் தான் வேலூரை ‘வெயிலூர்’ என்று அழைக்கின்றனர். கடந்த சில நாட்களாக 104 டிகிரிக்கும் மேல் வெயில் அளவு பதிவானது. கடந்த திங்கட்கிழமை அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் கொளுத்தியது. அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று முதல் (வெள்ளிக்கிழமை) அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. அதனால் இனி வரும் நாட்களில் வெயில் அளவு மேலும் அதிகமாக காணப்படும். அனல் காற்றின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வேலூர் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் 40 செல்சியஸ் முதல் 42 செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் இருக்கும். வெயிலின் தாக்கம் சராசரியை விட கூடுதலாக இருக்கும் எனவும், அனல் காற்று வீசும் எனவும் மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே வர வேண்டாம்.
கோடை வெப்பத்தை சமாளிக்க குடிநீர், மோர் போன்ற நீர் ஆகாரங்களை அதிக அளவில் அருந்த வேண்டும். நீர்ச்சத்துள்ள பழங்களை அதிகளவில் சாப்பிட வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போது முன்எச்சரிக்கை நடவடிக்கையாக குடை, தொப்பி, காலணி, வெள்ளை நிற பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.
ஆடு, மாடு போன்ற கால்நடைகளை நிழல் பகுதிகளில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story