கே.போத்தம்பட்டி, குப்பணம்பட்டி கூட்டுறவு வங்கி தேர்தல்


கே.போத்தம்பட்டி, குப்பணம்பட்டி கூட்டுறவு வங்கி தேர்தல்
x
தினத்தந்தி 4 May 2018 5:00 AM IST (Updated: 4 May 2018 4:49 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி அருகே கே.போத்தம்பட்டி, குப்பணம்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தல் வேட்புமனுக்களை அ.தி.மு.க.வினர் கிழித்து எறிந்தும் நாற்காலிகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே உள்ளது கே.போத்தம்பட்டி. இந்த ஊரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் 62 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் தேர்தல் அதிகாரி வீரமுருகன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 26 மனுக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் நேற்று மனுக்கள் வாபஸ் பெறும் நாள் என்பதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

தொடர்ந்து மதியம் தேர்தல் அதிகாரி போத்தம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிற்கு வந்து, தேர்தல் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.வினர் சற்றும் எதிர்பாராத விதமாக தேர்தல் அதிகாரி கையில் இருந்த வேட்பு மனுக்களை திடீரென பறித்து கிழித்து எறிந்தனர். மேலும் அங்கிருந்த நாற்காலிகளையும் உடைத்தனர். இதனால் அங்கு பதட்டமான நிலை உருவானது.

இதேபோல் உசிலம்பட்டி அருகே உள்ள குப்பணம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தலுக்கான வேட்பு மனு பெறப்பட்டது. இதில் 48 பேர் மனுக்கள் வரப்பெற்றது. இந்த மனுக்களின் மீதாக பரிசீலனை தேர்தல் அதிகாரி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடைபெற் றது. இதில் 32 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் நேற்று மனுக்கள் வாபஸ் பெறும் நாள் என்பதால் அனைவரும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இந்தநிலையில் அ.தி.மு.க. வைச் சேர்ந்த கன்னியம்பட்டியைச் சேர்ந்த முத்துராமு என்பவர் வங்கிக்கு வந்து அலுவலக அறையில் இருந்த தேர்தல் அதிகாரியின் கையில் இருந்த வேட்பு மனுக்களை கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story