பா.ஜனதா, தலித் மக்களுக்கு எதிரான கட்சி சுஷில்குமார் ஷின்டே பேட்டி
பா.ஜனதா தலித் மக்களுக்கு எதிரான கட்சி என்று முன்னாள் மத்திய மந்திரி சுஷில்குமார் ஷின்டே குற்றம் சாட்டினார்.
பெங்களூரு,
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சுஷில்குமார் ஷின்டே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் தலித், பழங்குடியின மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தலித், பழங்குடியின மக்களை பாதுகாக்கும் சட்டத்தின் வீரியத்தை குறைக்கவும் மோடி அரசு முயற்சி செய்கிறது. இதை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆளும் பா.ஜனதா அரசுகள் அந்த சட்டத்தை அமல்படுத்தவும் முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தை சரியாக அமல்படுத்தாத போலீஸ் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வீரியம் குறைந்த சட்டத்தை அமல்படுத்த பா.ஜனதாவை சேர்ந்த எம்.பி.க்களே கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். சிலர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கர்நாடகத்தில் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக மொத்த பட்ஜெட்டில் 24.10 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டில் சராசரியாக தினமும் தலித் சமூகத்தை சேர்ந்த 6 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்.கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா தலித் ஒருவரின் வீட்டுக்கு சென்று ஓட்டல் உணவை வரவழைத்து சாப்பிட்டார். மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, தலித் மக்களை குரைக்கும் நாய்கள் என்று கூறி அவமானப்படுத்தினார். மத்தியபிரதேச மாநிலத்தில் போலீஸ் உடல் தகுதி தேர்வுக்கு வந்த தலித் இளைஞர்களின் உடலில் சாதி பெயரை குறிப்பிட்டுள்ளனர். இது ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தலித் மக்களை பா.ஜனதா அவமானப்படுத்தி வரும் சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகலாம். பா.ஜனதா, தலித் மக்களுக்கு எதிரான கட்சி ஆகும்.
இவ்வா சுஷில்குமார் ஷின்டே கூறினார்.

Related Tags :
Next Story