கூடங்குளம் தங்கும் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தனர்


கூடங்குளம் தங்கும் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தனர்
x
தினத்தந்தி 5 May 2018 3:00 AM IST (Updated: 4 May 2018 6:42 PM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் தங்கும் விடுதியில் கேரளத்தை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

கூடங்குளம், 

கூடங்குளம் தங்கும் விடுதியில் கேரளத்தை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். மயங்கி கிடந்த 2 பேரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்காதல் 

கேரள மாநிலம் கொல்லம் ராணிபுரத்தை சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவருடைய மனைவி மாலு என்ற ஜெயசூர்யா(வயது30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

அந்த பகுதியில் அய்யாச்சாமி ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்கு அந்த பகுதியை சேர்ந்த தாசன் மகன் பினு(41) என்பவர் அடிக்கடி வந்து சென்றார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 17 வயதிலும், 15 வயதிலும் 2 குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஓட்டலுக்கு வந்து சென்ற பினுவுக்கும், மாலுவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

குடும்பத்தினர் கண்டிப்பு 

இது அரசல் புரசலாக இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்தது. இதனால், இருவரையும் அவரவர் வீட்டில் கண்டித்தனர். ஆனாலும் கள்ளக்காதல் ஜோடியினர் அடிக்கடி சந்தித்து வந்தனர். இதை அறிந்த அய்யாச்சாமி மனைவியை கடுமையாக கண்டித்ததுடன், பினுவை சந்திக்க தடை விதித்தார்.

இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஜோடி ஊரை விட்டு வெளியேறி கன்னியாகுமரிக்கு சென்றனர். அங்கு உல்லாசமாக சுற்றிய ஜோடி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் கூடங்குளம் ஆத்தங்கரை பள்ளிவாசலில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை வாடகைக்கு எடுத்து தங்கினர்.

தற்கொலை முயற்சி 

இவர்கள் நேற்று முன்தினம் மாலையில் அறையை காலி செய்வதாக தங்கும் விடுதி ஊழியர்களிடம் கூறி உள்ளனர். ஆனால், நீண்ட நேரமாக அறையை காலி செய்யாததுடன், கதவும் பூட்டப்பட்டு இருந்ததால் விடுதி ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர்.

இதுகுறித்து கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கூடங்குளம் போலீசார் அந்த விடுதிக்கு விரைந்து சென்றனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தேபாது, பினுவும், மாலுவும் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கிடந்தனர்.

தீவிர சிகிச்சை 

அந்த 2பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக அந்த 2பேரையும் போலீசார் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இருவரின் குடும்பத்தினருக்கும் கூடங்குளம் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில், மாலுவை கண்டுபிடித்து தருமாறு அவருடைய கணவர் அய்யாச்சாமி கொல்லம் அருகில் உள்ள வட்டப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். இது தொடர்பாக அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story