பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் வீரசக்கதேவி ஆலய கால்நாட்டு விழா ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் வீரசக்கதேவி ஆலய விழாவுக்கான கால்நாட்டு விழா நேற்று நடந்தது.
ஓட்டப்பிடாரம்,
பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் வீரசக்கதேவி ஆலய விழாவுக்கான கால்நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கால்நாட்டு விழா
ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் வீரசக்கதேவி ஆலய விழா சித்திரை மாதம் கடைசி வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா வருகிற 11, 12–ந் தேதிகளில் நடக்கிறது. விழாவை முன்னிட்டு வீரசக்கதேவி ஆலயத்தில் கால்நாட்டு விழா நேற்று நடந்தது.
இதையொட்டி வீரசக்கதேவிக்கு 16 வகையான சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 10.30 மணிக்கு கால்நாட்டு விழா வீரசக்கதேவி ஆலய குழு தலைவர் முருகபூபதி தலைமையில் நடந்தது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தன.
மாட்டு வண்டி போட்டி
நிகழ்ச்சியில் செயலாளர் மல்லுச்சாமி, துணை தலைவர்கள் வேலுச்சாமி, பாலகிருஷ்ணன், முருகேசன், துணை செயலாளர் முருகபூபதி, இணை செயலாளர் சண்முகமல்லுசாமி, வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசு வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா வருகிற 11–ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கிறது. விழாவையொட்டி சிறப்பு கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாட்டு வண்டி போட்டி நடக்கிறது.
விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story