கோவில் குளத்தில் மூழ்கி விவசாயி சாவு


கோவில் குளத்தில் மூழ்கி விவசாயி சாவு
x
தினத்தந்தி 5 May 2018 4:30 AM IST (Updated: 5 May 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே கோவில் குளத்தில் மூழ்கி விவசாயி பரிதாபமாக பலியானார்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஞாயிறு கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 60). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தன்னுடைய உறவினர்களுடன் ஊத்துக்கோட்டை அருகே செங்கரை பகுதியில் உள்ள காட்டு செல்லியம்மன் கோவிலுக்கு சென்றார். சாாமி தரிசனம் முடிந்த பிறகு அருகே உள்ள கோவில் குளத்தில் குளிக்க இறங்கினார்.

நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதியில் சிக்கி குளத்தில் மூழ்கினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் மீட்க முடியவில்லை. இது குறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் பாலு உடனே போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். அதன்பிறகு தேர்வாய்கண்டிகையில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும்பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். குளத்தில் மூழ்கி பலியான கஜேந்திரன் உடலை வெளியே எடுத்தனர். போலீசார் கஜேந்திரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Next Story