வங்கி, நகை கடைகளில் இரவு நேரக்காவலாளிகள் நியமிக்க வேண்டும்


வங்கி, நகை கடைகளில் இரவு நேரக்காவலாளிகள் நியமிக்க வேண்டும்
x
தினத்தந்தி 4 May 2018 10:45 PM GMT (Updated: 4 May 2018 10:08 PM GMT)

தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நகை கடை மற்றும் நகை அடகுகடைகளில் கட்டாயம் இரவு நேரக்காவலாளிகளை நியமனம் செய்ய வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் வலியுறுத்தினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை டவுன் உட்கோட்ட போலீசார் சார்பில் குற்ற தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், கருணாகரன், மன்னர்மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறு முகம் பேசுகையில், அனைத்து தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள், ஏ.டி.எம் அறைகள், நகை கடைகள், நகை அடகு கடைகள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்ட இடங்களில் உள்ளேயும், வெளியேயும் சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் அலாரத்தை ஒருவார காலத்திற்குள் பொருத்த வேண்டும்.

அலாரம் மற்றும் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்ப்டடு இருந்தால், அவற்றை ஒவ்வொரு மாதமும் சரியாக இயங்குகிறதா என சோதனை செய்து கொள்ள வேண்டும்.

நகை கடைகளுக்கு நகை வாங்க வருவர்களின் செயல்பாடுகளை கடையின் ஊழியர்கள் கவனிக்க வேண்டும். தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நகை கடை மற்றும் நகை அடகுகடைகளில் இரவு நேரக்காவலாளிகளை நிய மனம் செய்ய வேண்டும்,

இதில் நகை கடை உரிமையாளர் சங்க தலைவர் வெங்கடாஜலம், அனைத்து தேசிய வங்கி மேலாளர்கள், கூட்டுவு வங்கிகளின் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் நகை கடை மற்றும் நகை அடகு கடைகள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story