அனுமதியின்றி இயங்கும் 8 மகளிர் விடுதிகளுக்கு ‘நோட்டீஸ்’


அனுமதியின்றி இயங்கும் 8 மகளிர் விடுதிகளுக்கு ‘நோட்டீஸ்’
x
தினத்தந்தி 5 May 2018 3:45 AM IST (Updated: 5 May 2018 3:45 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கும் 8 மகளிர் விடுதிகளுக்கு ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மகளிர் விடுதி, கருணை இல்லம், முதியோர் இல்லங்கள் இயங்கி வருகின்றதா? என்பதை கண்டறிந்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர் ராமன், சமூக நலத்துறைக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சாந்தி தலைமையிலான குழுவினர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட ஆய்வில், மாவட்டம் முழுவதும் 8 மகளிர் விடுதிகள் அனுமதியின்றி இயங்கி வருவது தெரிய வந்தது. இதையடுத்து 8 விடுதி நிர்வாகிகளுக்கும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து விடுதிகளை உடனடியாக பதிவு செய்யும்படி சமூக நலத்துறை சார்பில் ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கருணை இல்லம், முதியோர் இல்லங்களும் அனுமதியுடன் இயங்கி வருகிறதா? என்று சோதனை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story