கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பெருநகரங்களுக்கு 9-ந்தேதி முதல் பால் வினியோகிக்க மாட்டோம்


கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பெருநகரங்களுக்கு 9-ந்தேதி முதல் பால் வினியோகிக்க மாட்டோம்
x
தினத்தந்தி 5 May 2018 4:57 AM IST (Updated: 5 May 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க கோரி பால் உற்பத்தியாளர்கள் கடந்த 3-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மும்பை,

கொள்முதல் விலையை அரசு உயர்த்தாததை கண்டித்து அகமதுநகர், அவுரங்காபாத், புனே, சத்தாரா, சாங்கிலி, கோலாப்பூர், சோலாப்பூர், பர்பானி உள்ளிட்ட மாவட்டங்களில் பாலை இலவசமாக வினியோகம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், வருகிற 9-ந்தேதிக்குள் அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு பால் சப்ளை செய்ய மாட்டோம் என எச்சரித்து உள்ளனர். 

Next Story