95 சதவீத மக்கள் மாசுபட்ட காற்றைச் சுவாசிக்கின்றனர்
உலகில் 95 சதவீத மக்கள் சுத்தமற்ற காற்றைச் சுவாசிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
நகரமயமாக்கல் காரணமாக வளரும் நாடுகளில் இப்பிரச்சினை அதிகம் காணப்படுவதாக அமெரிக்காவின் மசாசூசெட்சில் உள்ள ஓர் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள காற்றுத் தூய்மை அளவை 60 சதவீத நாடுகள் இன்னும் எட்டவில்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசினால் கடந்த ஆண்டு இறந்த 50 லட்சம் பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டில் உலகில் 200 கோடிக்கும் மேற்பட்டோர் காற்று மாசு தாக்கத்துக்கு உள்ளானார்கள் என்றும், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச நாடுகளில் 2010-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது காற்று மாசுபாட்டின் அளவு மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது தெரியவந்திருக்கிறது என்றும் ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர்.
Related Tags :
Next Story