மாவட்ட செய்திகள்

உலகின் முதல் பிளாஸ்டிக் மாளிகை + "||" + World's First Plastic House

உலகின் முதல் பிளாஸ்டிக் மாளிகை

உலகின் முதல் பிளாஸ்டிக் மாளிகை
கனடா நாட்டைச் சேர்ந்த ராபர்ட் பெஸு, முழுக்க முழுக்க பிளாஸ்டிக்கால் ஆன உலகின் முதல் பிளாஸ்டிக் மாளிகையைக் கட்டியிருக்கிறார்.
னாமாவின் போகாஸ் டெல் டோரோ தீவில் ராபர்ட் இந்த பிளாஸ்டிக் மாளிகையைக் கட்டியுள்ளார். வீணான பிளாஸ்டிக் பொருட்களால் பயனுள்ள அமைப்புகளை ஏற்படுத்துவதற்கு பெயர் பெற்ற ராபர்ட்டை, ‘பிளாஸ்டிக் மன்னர்’ என்றே அழைக்கின்றனர்.

பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுவதைக் கண்ட ராபர்ட், வீணாக எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு வீடுகள் கட்ட திட்டமிட்டார்.

அதன்படியே, மனிதர்களால் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு குறைந்த செலவில் உறுதியான வீடுகளைக் கட்ட முடியும் என்பதை அவர் செய்து காட்டியிருக்கிறார்.

இதே முறையைப் பயன்படுத்தி ஒரு சுற்றுச்சூழல் கிராமத்தையே அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இந்தத் திட்டத்துக்காக பனாமாவில் சுற்றுச்சூழல் சிறப்பு விருது ஒன்றையும் ராபர்ட் பெற்றிருக்கிறார். இந்த விருதைப் பெறும் முதல் வெளிநாட்டுக்காரர் இவர் ஆவார்.

சுமார் 40 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு கட்டியுள்ள தனது நான்கடுக்கு மாளிகைக்கு சிறுவர்களை வரவேற்கும் ராபர்ட், இன்றைய தலைமுறை, உலகுக்குச் செய்துள்ள தீமையை சுட்டிக்காட்டி, அவற்றை நல்ல வழியில் பயன்படுத்துவதற்காக ஒரு முன்மாதிரியாக இதைச் செய்திருப்பதாகக் கூறுகிறார்.