மாவட்ட செய்திகள்

எழுமலை அருகே 32 கிலோ கஞ்சா, ரூ.5¾ லட்சம் பறிமுதல்; 4 பேர் கைது + "||" + Cannabis, Rs.5.5 lakhs confiscated 4 people arrested

எழுமலை அருகே 32 கிலோ கஞ்சா, ரூ.5¾ லட்சம் பறிமுதல்; 4 பேர் கைது

எழுமலை அருகே 32 கிலோ கஞ்சா, ரூ.5¾ லட்சம் பறிமுதல்; 4 பேர் கைது
எழுமலை அருகே 32 கிலோ கஞ்சா, ரூ.5¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது, இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
உசிலம்பட்டி,

எழுமலை அருகே உள்ள மானூத்து பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மானூத்து அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த கோட்டைச்சாமி (46) என்பரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் மானூத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் சந்திரன் என்பவரிடம் கஞ்சா வாங்கி வந்ததாக தெரிவித்தாராம். அதைத்தொடர்ந்து தனிப்பிரிவு போலீசார் சந்திரன் வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது, அங்கு கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சந்திரனின் மனைவி போதுமணி (55), மகள் பேச்சியம்மாள்(32), மருமகன் கோபிநாத்(42) மற்றும் கோட்டைச்சாமி ஆகியோரை கைது செய்து, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 32 கிலோ கஞ்சா மற்றும் பீரோவில் வைத்திருந்த ரூ.5¾ லட்சத்தை கைப்பற்றினர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களையும், பணத்தையும் தனிப்பிரிவு போலீசார், எழுமலை போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய கஞ்சா வியாபாரி சந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.