ஜாமீனில் வெளிவந்த சகன் புஜ்பாலுடன் தனஞ்செய் முண்டே சந்திப்பு


ஜாமீனில் வெளிவந்த சகன் புஜ்பாலுடன் தனஞ்செய் முண்டே சந்திப்பு
x
தினத்தந்தி 6 May 2018 4:53 AM IST (Updated: 6 May 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய துணை முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் சகன் புஜ்பால். தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மும்பை,

சகன் புஜ்பாலின் உடல்நிலையை கருத்தில் கொண்டு 2 வருடங்களுக்கு பிறகு மும்பை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்தநிலையில் மராட்டிய சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவரான தனஞ்செய் முண்டே(தேசியவாத காங்கிரஸ்) மும்பை கே.இ.எம். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சகன் புஜ்பாலை நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், சகன் புஜ்பாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை வரவேற்றதோடு, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்தார். 

Next Story