மாவட்ட செய்திகள்

சக்தி முத்தியாலம்மன் கோவில் தேரோட்டம் + "||" + Shakti Muthalalman Temple Terottam

சக்தி முத்தியாலம்மன் கோவில் தேரோட்டம்

சக்தி முத்தியாலம்மன் கோவில் தேரோட்டம்
தெள்ளாரில் ஸ்ரீசக்தி முத்தியாலம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறுவது.
வந்தவாசி

வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் உள்ள ஸ்ரீசக்தி முத்தியாலம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா நேற்று நடந்தது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். விழாவையொட்டி முன்னதாக கூழ்வார்த்தலும், ஊரணி பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. தேர் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை விழாகுழுவினரும், ஊர் பொதுமக்களும், உபயதாரர்களும் செய்திருந்தனர்.