292 பேருக்கு நிவாரணத்தொகை வழங்காததால் ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குனருக்கு அமைச்சர் கண்டிப்பு


292 பேருக்கு நிவாரணத்தொகை வழங்காததால் ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குனருக்கு அமைச்சர் கண்டிப்பு
x
தினத்தந்தி 7 May 2018 4:15 AM IST (Updated: 7 May 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் 292 பேருக்கு நிவாரணத்தொகை வழங்காததால் ராமேசுவரம் மீன்துறை உதவிஇயக்குனரை அமைச்சர் கண்டித்து ஆழ்கடல் மீன்பிடி படகு கட்டும் தொடக்கவிழாவில் பேசினார். அரசின் விதிமுறையை கடை பிடித்ததால் அவருக்கு மீன்துறை இயக்குனர் பாராட்டினார்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரையில் நேற்று மீன்வளத்துறையின் சார்பில் ஆழ்கடல் மீன் பிடி படகு கட்டுவதற்கான தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சேசுராஜா வரவேற்று பேசினார்.விழாவில் மாவட்ட கலெக்டர் நடராஜன் மீன்துறை இயக்குனர் சமீரன், ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் புதிய படகுகள் கட்டு வதற்கான பணியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லும் ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் சிறையில் அடைக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக மத்தியில் உள்ளவர்கள் பார்க்க வேண்டும், மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தார். அவருடைய ஆலோசனையின்படியே ஆழ்கடல் மீன் பிடிப்பு திட்டத்தை செயல் படு த்தவும் மத்திய அரசு அனுமதி வழங்கி ரு.200 கோடி நிதியும் ஒதுக்கிஉள்ளது.

இதில் மாநில அரசு சார்பில் ரூ.86 கோடி நிதி ஒதுக்கப்பட்டுஉள்ளது. ஆழ்கடல் மீன் பிடிப்பு திட்டம் என்பது மிகப்பெரிய ஒரு முக்கியமான திட்டமாகும். இந்த திட்டத்திற்காக குந்துகால் கடற்கரையில் மீனவர்களின் படகுகளை நிறுத்த வசதியாக ரூ.70 கோடி மதிப்பில் பெரிய துறைமுகமும் கட்டப்பட உள்ளது. அதற்கான டெண்டரும் விடப்பட்டுவிட்டன.

மீனவர்களுக்காக முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். ஏற்கனவே இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட 18 படகுகளுக்கு தலா ஒரு படகுக்கு ரூ.5 லட்சம் வீதம் ரூ.90 லட்சத்தை மீனவர்களுக்கு தமிழக அரசு மூலம் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

மீனவர்களுக்கு தடைகால நிவாரண தொகை, புயல் கால சேமிப்பு நிவாரண தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தடைகாலத்தில் கொடுக்கப்படக்கூடிய இந்த ரூ.5000-த்தை ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் வடக்கு பகுதியில் உள்ள மீனவர்களுக்கும், மண்டபம், பாம்பனில் உள்ள மீனவர்களுக்கும் இந்த நிவாரண தொகை வழங்கப்பட்டு விட்டது. ஆனால் ராமேசுவரத்தில் உள்ள 292 மீனவர்களுக்கு இதுவரை இந்த நிவாரணத்தொகை வழங்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து அமைச்சர் என்ற முறையில் பல முறை ராமேசுவரத்தில் பணியாற்றும் மீன்துறை உதவி இயக்குனர் மணிகண்டனிடம் வலியுறுத்தி உள்ளேன். அவரிடம் கேட்டால் படகு வைத்திருக்கும் மீனவர்கள், படகு உரிமையாளர்களாக உள்ளதால் இந்த நிவாரண தொகை வழங்க கூடாது என அரசின் விதிமுறை உள்ளதால் எப்படி வழங்க முடியும் என கேட்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த மேடையில் மீன்துறை இயக்குனர் இருப்பதால் அவருடைய கவனத்திற்கு வருவதற்காக தான் இதை இங்கு கூறுகிறேன். இது குறித்து இயக்குனர் நடவடிக்கை எடுத்து ராமேசுவரம் மீனவர்களுக்கான நிவாரண தொகையை கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கி ன்றேன். தடை காலத்தில் இறால்குஞ்சுகளை விடுங்கள். அப்போது தான் இறால் மீன்கள் அதிகஅளவில் வளர்ச்சியடையும். தடைகாலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது இறால் மீன்கள் அதிகஅளவில் கிடைப்பதோடு அவர்களின் வாழ்வாதாரம் பெருகும். அதுபோல் ராமேசுவரம் பகுதியில் நிலத்தடி நீரை பாழ்படுத்தும் நோக்கில் இறால் பண்ணைகள் உள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து வருகின்றார். அனைத்து இறால் பண் ணைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேசுவரம் தீவு பகுதியில் உள்ள மாணவர்களின் நலன் கருதி ராமேசுவரம் தீவு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என முதல் வரிடம் வலியுறுத்தி வருகிறேன். விரைவில் மானிய கோரிக்கையில் ராமேசுவரத்தில் கலைக் கல்லூரி அறிவிப்பு வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிலையில் விழா முடிந்து மேடையை விட்டு இறங்கி அமைச்சர் காரில் ஏறி புறப்பட்டு சென்ற பின்பு மீன்துறை இயக்குனர் சமீரன் ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குனர் மணிகண்டனை அழைத்து விவரம் கேட்டறிந்தார். அப்போது மீன்துறை உதவி இயக்குனர் அரசின் விதி முறைப்படி படகு வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு புயல்கால சேமிப்பு நிவாரண தொகை கிடையாது என்ற விதிமுறை உள்ளதாகவும் அதன் அடிப்படையில் தான் 292 மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை எனவும் விளக்கம் அளித்தார்.அதை கேட்ட மீன்துறை இயக்குனர், உதவி இயக்குனரை தோளில் தட்டியும், கை கொடுத்தும், உங்களது பணியை சரியாக செய்கிறீர்கள், அரசின் விதிமுறையில் என்ன உள்ளதோ அதன்படி செய்யுங்கள் என பாராட்டினார்.

அமைச்சர் மீன்துறை உதவி இயக்குனரை கண்டித்து பேசிய சிறிது நேரத்தில் அனைத்து மீனவர்கள் முன்னிலையில் மீன்துறை இயக்குனர், உதவி இயக்குனர் மணிகண்டனை நேரடியாக பாராட்டி சென்றது கூடியிருந்த மீனவர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மத்தியல் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அப்போது மீனவர்களிடம் பேசிய மீன்துறை இயக்குனர் சமீரன் மீனவர்களுக்கு ே-வையான உதவிகளை செய்ய அரசு எப்போதும் தயாராக உள்ளது.

அரசின் விதி முறையில் என்ன முடியுமோ கண்டிப்பாக அதை உங்களுக்கு பெற்றுத் தருவேன். விதிமுறையை மீறி கேட்கும் பட்சத்தில் கண்டிப்பாக அதை பெற்றுத் தர முடியாது எனவும் மீனவர்களிடம் தெரிவித்துவிட்டு காரில் புறப்பட்டு சென்றார்.

Next Story