ரேஷன் கடை ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்: விழுப்புரத்தில் நடந்த மண்டல மாநாட்டில் தீர்மானம்


ரேஷன் கடை ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்: விழுப்புரத்தில் நடந்த மண்டல மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 7 May 2018 4:00 AM IST (Updated: 7 May 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன்கடை ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம்,

தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்கள் சங்க மண்டல மாநாடு விழுப்புரத்தில் நடந்தது. மாநாட்டுக்கு தொ.மு.ச. மாநில தலைவர் பிச்சாண்டி தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், பொருளாளர் வெங்கடா சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயபாலன் வரவேற்றார்.

மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, ராதாமணி, மாசிலாமணி, உதயசூரியன், தொ.மு.ச. பேரவை செயலாளர் பொன்னுராம், துணைத்தலைவர் ராசவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ரேஷன் கடை ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், பொது வினியோக திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும், ரேஷன் கடை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் சலுகைகள் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சி.ஐ.டி.யு. மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தொ.மு.ச. மாநில பொருளாளர் சந்திரன், பொதுச்செயலாளர் சேகர், மாவட்ட கவுன்சில் செயலாளர் ஞானப்பிரகாசம், மாநில பொதுச்செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கட்ராயலு நன்றி கூறினார். 

Next Story