காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 14-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 14-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 7 May 2018 4:00 AM IST (Updated: 7 May 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலி யுறுத்தி வருகிற 14-ந் தேதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் முருகேசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்து தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள மாநில அரசு தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்துள்ளது. இதனால் தமிழகம் பாலைவனமாகும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை உடடியாக இழுத்து மூட வேண்டும்.

முற்றுகை போராட்டம்

மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்்பன் உள்ளிட்ட எரிவாயு திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும். ஆற்று மணல், தாது மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

இதில் மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரை.அருள்ராஜன், இளைஞர் பெருமன்ற மாவட்ட நிர்வாகிகள் பழனி, சுஜாதா, ஒன்றிய நிர்வாகிகள் குமார், சாந்தகுமார், கனேஷ், காந்தி, பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story