ஒட்டக்குளம் ஜல்லிக்கட்டில் 540 காளைகள் சீறிப்பாய்ந்தன வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர்
ஒட்டக்குளத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 540 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு காளைகளை அடக்கினர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே ஒட்டக்குளத்தில் காரண செல்ல அய்யனார், செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குதிரை எடுப்பு திருவிழாவை முன்னிட்டு ஒட்டக்குளத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்தனர். இதற்கான முன்னேற்பாடு பணிகளை நேற்று முன்தினம் கலெக்டர் கணேஷ் ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினார்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 7.30 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. கோவில் காளையை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 540 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்றன. சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை சுமார் 120 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு அடக்கினர். இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடியது. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்தனர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் லாவகமாக தப்பி சென்றன. இதில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 5 மாடுபிடி வீரர்கள் காய மடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு மைதானம் அருகே அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த 2 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜல்லிக்கட்டில் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, புதுக்கோட்டை உதவி கலெக்டர் கே.எம்.சரயு, தாசில்தார் தமிழ்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story